ஒளியாவணம்


தஞ்சைப் பெரிய கோவில் பற்றிய BBCஇன் ஆவணப் படத்தைப் பார்த்திருக்கிறீர்களா.. அருமையாக எடுத்திருப்பார்கள்.. நமது வரலாற்றைப் பற்றியும் பண்பாட்டைப் பற்றியும் மேலைத்தேயத்தவர்கள் இலகுவாக அறிந்து கொள்ளக் கூடிய விதத்தில் ஆங்கிலத்தில் இத்தகைய ஒளியாவணங்கள் ஏராளம் உள்ளன..
வெளியுலகைப் பற்றித் தமிழில் இப்படியான ஆக்கங்கள் இருந்தால் எவ்வளவு நல்லது என்று தஞ்சைக் கோவில் ஒளியாவணத்தைப் பார்த்தபோது தோன்றியது.
அது அளித்த inspiration இல், இந்த எண்ணத்துக்குச் செயல் வடிவம் கொடுக்கலாம் என்று, ஏறத்தாழ எட்டு மாதங்களுக்கு முன்னம் ‘யாதும் ஊரே’ என்ற செயற்றிட்டத்தை ஆரம்பித்தேன். இங்கிலாந்தில் தொடங்கி உலகின் வெவ்வேறு இடங்கள் பற்றி – அவற்றின் வரலாறுகளையும் பண்பாட்டுக் கூறுகளையும் கவனப்படுத்தி - விவரணப்படங்களைத் தயாரிப்பது என்பது திட்டத்தின் நோக்கம். Video Production வேலைகளை நண்பர் ஹதீபன் பொறுப்பெடுத்துக் கொண்டார். மாதத்துக்கு ஒரு நிகழ்ச்சி என்ற அடிப்படையில் செய்வதென்று திட்டமிட்டோம். இது ஒரு ambitious project .
ஆனால் ஓரிரண்டு பேரின் முயற்சி மாத்திரமே மூலதனமாக இருந்த இந்தத் திட்டத்தை அந்த வேகத்தில் முன்னெடுத்துச் செல்வது நினைத்தது போல அவ்வளவு இலகுவாக இருக்கவில்லை. இந்தத் தொடரின் முதலாவது அத்தியாயத்தை (36 minutes) முழுமைப்படுத்துவதற்கே எட்டு மாதங்கள் சென்றிருக்கின்றன. லண்டனில் உள்ள British Museum பற்றிய முதலாவது அங்கம் தற்போது முழுமையடைந்திருக்கிறது. பலத்த சவால்களையும் தாண்டி இது நேர்த்தியானதொரு வடிவத்தை எட்டியிருப்பது மகிழ்ச்சியே.
இணைப்பில் இருப்பது அந்த ஒளியாவணத்தின் trailer (50 secs). முழு வடிவத்தை இன்னும் ஓரிரு வாரங்களில் வெளியிடக் கூடியதாயிருக்கும்.
இந்த முயற்சிக்கு ஊக்கமளிக்க விரும்பும் நண்பர்கள் இந்த வீடியோவை தமது Facebook பக்கங்களில் பகிர்ந்து ஆதரவு தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். உங்கள் நண்பர்களையும் பகிர்ந்து கொள்ளும்படி பரிந்துரைப்பீர்கள் என்றால் இரட்டிப்பு மகிழ்ச்சி. இதற்கான வரவேற்பு தரும் புத்த்துணர்ச்சியைக் கொண்டு தான் அடுத்த அடியை எடுத்து வைக்கலாம்.. நன்றி நண்பர்களே :) 

(ஃபேஸ்புக்கில் பகிர்ந்தது) 


Update 1:

யாதும் ஊரே' ஒளியாவணத் தொடரின் முதலாவது அங்கம் வெளிவரவுள்ளதைப் பற்றி (இந்தப் பதிவைப் படியுங்கள்) பேராசிரியர் எஸ் மௌனகுரு அவர்கள் ஃபேஸ்புக்கில் இப்படி வாழ்த்தி எழுதியிருக்கிறார்கள்:"லண்டன் அரும் பொருட் காட்சியகம் மிக முக்கியமானது. சென்ற வருடம் அங்கு வந்தபோதுஒரு முழுநாள் அங்கு கழித்தேன். உலக நாகரீகங்களையும் சொந்த நாட்டில் காண முடியாத அல்லது கிடைக்காத பழம் பொருட்களையும் அங்கு காணலாம்.பிரித்தானிய ஆதிக்க சக்திகளின்பெருமையை அது காட்டி நிற்கினும் மறுபுறம் காலனி நாடுகளின் சில வரலாற்றுச் சின்னங்களையும் அது வைத்துள்ளது என்பது அதன்நல்லபக்கம்.
அதனைவைத்து ஓர் ஆவணபடம் தயாரிக்கும்தங்கள் முயற்சி வெகுவாகப் பாராட்டப் பட வேண்டியது.
நான் அங்கு வந்த போது இலங்கையின்கிழக்குமாகாணத்தில் கிறிஸ்தாப்த காலத்தில் புழக்கத்தில் இருந்த புராதன நாணையம் ஒன்றை கண்ணாடிப் பெட்டி ஒன்றினுள் கண்டு அசந்து போனேன். அது பற்றிய சில குறிப்புகளை இங்கிருந்துவரும் சிறு பத்திரிகையான மகுடத்தில் அதன்ஆசிரியர் மைக்கல் கொலின்ஸ் வெளியீட்டிருந்தார்
தங்கள் முயற்சி வெற்றி பெற என் ஆசிகளும் வாழ்த்துக்களும்"


வாழ்த்துக்கும் ஆசிக்கும் மிக்க நன்றி பேராசிரியர் ஐயா

Update 2:

எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் 'யாதும் ஊரே' ஆவணத்தொடர் முயற்சி பற்றிய குறிப்பைத் தனது வலைத்தளத்தில் பிரசுரித்திருக்கிறார். அவருக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்:

"நண்பர் சஜிதரன் அவரது ஒரு புதுமுயற்சி பற்றி எழுதியிருந்தார். பெரிய திட்டம் சிறப்பாக வருமென்றால் தமிழில் ஒரு கொடையாக அமையும். அவருக்கு என் வாழ்த்துக்கள்
ஜெ"

http://www.jeyamohan.in/?p=46345


Popular Posts