Sunday, 5 January 2014

மழைப்பேயரவம்



பெய்யும் மழையின் பேயரவம்
வெளியே
நுவல வாய்த்ததோ
நொய்தின் நொய்ய சொல்

துறவி ஒப்பத் தூஉம் மழை
புரவி ஒப்பப் போகும் மனம்

ஈரத்தின் இசை நார்களில்
யான் எது?
மட்கும் மண்சுவர் மீது
மெல்லப் படரும் பைம்பாசி


(05.01.2014)